Home இலங்கை குற்றம் சூதாட்ட நிலையங்களில் இருந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியில் 262 கோடி நிலுவை

சூதாட்ட நிலையங்களில் இருந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியில் 262 கோடி நிலுவை

0

இலங்கையின்(Sri lanka) முன்னணி சூதாட்ட நிறுவனங்களில் இருந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியில் 262 கோடி ரூபா வரித் தொகை செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்கள நிதி நிலைமை தொடர்பான கணக்காய்வில் இந்த விபரங்களை தேசிய கணக்காய்வு ஆணையாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மனுத் தாக்கல் 

இலங்கையில் உள்ள சூதாட்ட விடுதிகளில் நேரலை வசதி கொண்ட சூதாட்ட விடுதிகளில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 262 கோடியே 11 லட்சத்து 8 ஆயிரத்து 150 ரூபா வரி இதுவரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சூதாட்ட நிறுவனங்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக சூதாட்ட விடுதி உரிமையாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதன் காரணமாக சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து இதுவரை வரியை அறவிட்டுக் கொள்ள முடியாதிருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் குறித்த நிலுவைத் தொகையை துரித கதியில் அறவிட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version