Home இலங்கை சமூகம் விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம்: கிரிக்கட் மைதானத்தில் நடந்த சோகம்

விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம்: கிரிக்கட் மைதானத்தில் நடந்த சோகம்

0

இலங்கையில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஓருவர் மைதானத்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று(9) இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நடந்த சோகம்

ஆட்டமிழப்பு ஒன்றுக்காக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்க முயன்ற வேளை ஓருவருடன் ஒருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு மோதிக் கொண்டதில் பளுகஹாவெல கெட்டுவெல்கம பகுதியைச் சேர்ந்த இஹலகே தனுஷ்க தேவிந்த பெரேரா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தினைத் தொடர்ந்து மினுவன்கொட ஆதார வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனை

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிடியெடுப்பதற்காக முயற்சித்த போது மோதிக்கொண்ட மற்றைய வீரருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

டென்னிஸ் பந்தின் மூலம் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டியொன்றின் போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version