Home இலங்கை சமூகம் கத்தோலிக்க திருச்சபை அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் விடுத்துள்ள கோரிக்கை

கத்தோலிக்க திருச்சபை அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் விடுத்துள்ள கோரிக்கை

0

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாப்பரசரின் கொடியையோ அல்லது கத்தோலிக்க கொடியையோ கத்தோலிக்க சபை உள்ளிட்ட நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கத்தோலிக்க திருச்சபை அனைத்து கத்தோலிக்கர்களையும் கோரியுள்ளது.

அதேநேரம், கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசருக்கான இரங்கலை

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேசிய கத்தோலிக்க வெகுசன தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிசாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

பாப்பரசருக்கான இரங்கலை வெளிப்படுத்துவதற்காகக் கொழும்பிலுள்ள இலங்கைக்கான வத்திக்கான் தூதரகத்தில் விசேட நினைவேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version