Home இலங்கை பொருளாதாரம் கடந்த ஆண்டில் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டிய மத்திய வங்கி

கடந்த ஆண்டில் பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டிய மத்திய வங்கி

0

2024 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி (CBSL) 274.79 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆண்டில், வட்டி வருமானம், உணரப்படாத மறுமதிப்பீட்டு ஆதாயங்கள் மற்றும் விலை மாற்றங்களிலிருந்து உணரப்பட்ட ஆதாயங்கள் உட்பட வெளிநாட்டு நிதி சொத்துக்களிலிருந்து மத்திய வங்கி 110.55 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விலை மாற்றங்களின் மீதான ஆதாயங்கள் உட்பட தேசிய நிதி சொத்துக்களை அண்டி 227.25 பில்லியன் ரூபா நிகர வருமானத்தை தேசிய நிதி சொத்துக்களிலிருந்து மத்திய வங்கி ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம்

கடந்த ஆண்டில் மாத்திரம் மத்திய வங்கியின் பணிக்குழாம், சம்பளம் உட்பட 10.51 பில்லியன் ரூபாவை செலவிட்டது.

அத்துடன் 2023 ஆம் ஆண்டில், இந்த செலவு 7.25 பில்லியன் ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டில் 114.43 பில்லியன் ரூபா நட்டத்திற்கு முகம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடனின் முதல் நாள் இழப்பாக 766.41 பில்லியன் ரூபா நட்டம் பதிவு செய்யப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/cbsl-generates-over-rs-274-bln-profit-in-2024-1746004157

NO COMMENTS

Exit mobile version