Home இலங்கை சமூகம் மின்சார சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

மின்சார சபைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

0

மின்சார இணைப்புகளை வழங்கும் போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்று (28.02.2025) உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை (CEB) இதனை செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு

இதேவேளை தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி பொதுமக்களுக்கு அபாய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.  

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சாரக் கட்டணங்களை அண்மைய நாட்களில் 20 வீதத்தால் குறைத்தோம். ஆனால், வறட்சி இப்படியே சென்றால் மின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த 6 மாதங்களில் இலங்கை மின்சாரசபைக்கு 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என   மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில் மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may like this

https://www.youtube.com/embed/qWQ8sbL2QiQhttps://www.youtube.com/embed/gBYqF4i1au8

NO COMMENTS

Exit mobile version