Home இலங்கை பொருளாதாரம் 26 சதவீதம் வருவாய் அதிகரிப்பு : இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

26 சதவீதம் வருவாய் அதிகரிப்பு : இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

0

2026 ஆம் ஆண்டின் மே மாதத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த மொத்த வெளிநாட்டு வருவாய் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் வேலை செய்பவர்களிடம் இருந்து இலங்கைக்கு 847 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2025 மே மாதத்தில் கிடைத்த 641.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை பண அனுப்புதல் வருமானம் 205.3 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது.

மேலும், 2026 ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த பணத் தொகை 3.90 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீத வளர்ச்சியாக பதிவாகியுள்ளது.

இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை வலுப்படுத்துவதில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல்கள் தொடர்ந்தும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/central-bank-announces-increase-in-foreign-income-1780891994

NO COMMENTS

Exit mobile version