இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கொழும்பிலுள்ள மத்திய பேருந்து நிலையம் எதிர்வரும் 10 மாதங்களுக்கு புனரமைப்புப் பணிகள் காரணமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த புதுப்பித்தல் பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 540 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அநுர அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் குறித்து மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,
