Home இலங்கை அரசியல் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் களமிறங்கும் இ.தொ.கா

நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் களமிறங்கும் இ.தொ.கா

0

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்று, 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் 

இதன்பின்னர், ஜனாதிபதி தனது அரசியல் அமைப்பின் அதிகாரத்திற்கு அமைவாக கடந்த மாதம் 24ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் எடுத்திருந்தார்.

அதற்கமைவாக, தேர்தல் ஆணைக்குழுவினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி, காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிற்குள் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்க வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, மலையகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த கூட்டணியில் மற்றும் எந்த சின்னத்தில், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என பரவலாலும் பல்வேறு தரப்பினரால் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் (08) அதற்கான இறுதி முடிவை அக்கட்சி அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version