உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச
போட்டியிடமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாந்தோட்ட
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக தெரிவித்தார்.
நகைச்சுவை கருத்து
சமல் ராஜபக்ச பிரதேச சபைத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சில
தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே சானக எம்.பி. மேற்படி தகவலை
வெளியிட்டார்.
“நகைச்சுவைக்காகவே சமல் ராஜபக்ச அப்படியொரு தகவலை வெளியிட்டார். அவர்
தேர்தலில் போட்டியிடமாட்டார். நகைச்சுவையாக கருத்து வெளியிடும் சுதந்திரம்
அவருக்கு இல்லையா?”என கூறியுள்ளார்.
