Home இலங்கை அரசியல் என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன்! அமைச்சரை எச்சரித்த சாமர

என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன்! அமைச்சரை எச்சரித்த சாமர

0

என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சபம்பத் தசநாயக்க, அமைச்சர்  ஆனந்த விஜேபாலவிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து  கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

எம்மை கொலை செய்ய முயற்சிக்கின்றீர்கள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நீங்கள் எங்களை கொலை செய்யத்தான் முயற்சிக்கிறீர்கள். பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதற்கு பயமில்லை. கொலை செய்த பின்னர் பேயாக பின் தொடர்வேன்.

  

நீங்களும் பயங்கரவாதிகள் தான் உங்களின் பெயரையும் பயங்கரவாத பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். மறைக்கப்பட்ட விடயங்கள் எங்களிடம் அதிகம் இருக்கிறது. எமக்கும் அதிகமாக கதைக்க முடியும்.

அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்.வெலிகம பிரதேச சபைத் தலைவர் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்.அவரை பாதாள குழுவில் சேர்க்க வேண்டாம்.நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.

  

முடிந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்து எந்த பாதாள குழு செய்தது என்று கூறுங்கள். அப்போது நாம் ஒத்துக் கொள்கிறோம். கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. 

அதனால் பாதாள குழுவில்  அவரின் பெயரை சேர்த்து அவரின் குடும்பத்தை அவமாத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version