Home இலங்கை அரசியல் கழற்றப்பட்ட ஒலிபெருக்கிகள் – நுகேகொடையில் சூளுரைத்த சாமர சம்பத் எம்.பி

கழற்றப்பட்ட ஒலிபெருக்கிகள் – நுகேகொடையில் சூளுரைத்த சாமர சம்பத் எம்.பி

0

அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் என்பதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞையே இந்தக் கூட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்
தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,“தலைவர்களை உருவாக்குவதற்
குரிய கூட்டம் அல்ல நுகேகொடை பேரணி. 

அடிபணியப் போவதில்லை

நேரம் வரும்போது நாம் அடுத்த ஜனாதிபதியை ஒன்றிணைந்து
தெரிவு செய்வோம்.

இன்றைய கூட்டத்திற்குரிய ஒலிபெருக்கிகள் கழற்றப்பட்டுள்ளன.
பரவாயில்லை சிறைச்சாலையும் சென்றுவிட்டோம்.

எனவே அரசின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியப் போவதில்லை. நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது நாமலின் பட்டப்படிப்பு பற்றி
பேசுவதற்கு முன்னுரிமை வழங்கும் நிலைக்கு அரசு வந்துவிட்டது.

நாமலின் பட்டப்படிப்பு பற்றி தேடுவதற்கு முன்னர்
ஆட்சியாளர்கள் தமது கல்வித் தகைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.   

NO COMMENTS

Exit mobile version