Home இலங்கை சமூகம் தமிழ் மக்களால் ஆதரிக்கப்படுகின்றவரே ஜனாதிபதியாக வரவேண்டும் : சாணக்கியன் எதிர்வுகூறல்.

தமிழ் மக்களால் ஆதரிக்கப்படுகின்றவரே ஜனாதிபதியாக வரவேண்டும் : சாணக்கியன் எதிர்வுகூறல்.

0

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R. Chanakyan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மட்டக்களப்பு (Batticaloa) களுவாஞ்சிக்குடி சாயி சிறுவர் விளையாட்டு விழா விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் அபிவிருத்தி சார்ந்த விடையங்ககளையும் நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல்

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றுதான் எழுத்தியிருந்தோம்.

எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்கு சேவை செய்பவரை நன்கு அறிந்து எமது மக்கள் தேர்வு செய்ய வேண்டும் மிக விரைவாக எமது கட்சி ஒற்றுமையாக நாம் ஒரு முடிவை அறிவிப்போம்.

அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு எமது மக்களும் சேர்ந்து வருவார்கள் என்றால் நிற்சயமாக இப்பிரதேசத்தில் சிறந்த எதிர்காலத்தை அமைக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version