Home இலங்கை சமூகம் ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரினுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி

ஐக்கிய தேசியக் கட்சியில் ஹரினுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி

0

மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தமக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே தினக் கூட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, மே தின அமைப்பாளர் பதவியும் தமக்கு கிடைக்கும் என தெரிவித்த அவர், இந்த மே தினத்தை அனைத்து தரப்பினரும் உயர் மட்டத்தில் கொண்டாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி

இவற்றை கொண்டாடுவதற்கு உணவு மற்றும் பானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வந்தவுடன் குடிக்காமல் திரும்பி செல்லாமல் குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், அரச பேருந்துங்களை பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் சிறிகொத்தில் இருந்து செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/chance-to-get-the-post-of-national-organizer-harin-1713632069

NO COMMENTS

Exit mobile version