முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை வெளியேறியுள்ளனர்.
நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமை ரத்து சட்டத்தின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்ல சலுகையை தற்போது அவர்கள் இழந்துள்ளனர்.
சட்டத்தின் விதிமுறை
விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
இதனடிப்படையில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயாராகியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்கனவே தனியார் இல்லத்தில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
https://www.youtube.com/embed/u0_Z_j0cuXw
