Home இலங்கை அரசியல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அதிரடி மாற்றம்! பதவிகளுக்கு புதிய அதிகாரிகள்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அதிரடி மாற்றம்! பதவிகளுக்கு புதிய அதிகாரிகள்

0

பெப்ரவரி 12 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே. கரவிட்ட, குற்றப் புலனாய்வு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக Inspector General)  நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பணியாற்றிய பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியான எம்.டி.பி.தயாரத்ன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (எஃப்.சி.ஐ.டி) விரைவாக அமைக்கும் நோக்கில் இந்தப் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்துப் பிரிவு

இதே நேரத்தில்,  போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபரான பி. லியனகே, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.

இதன்படி பொலிஸின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) மீண்டும் நிறுவுவதன் மூலம், நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை மிகவும் முறையான மற்றும் திறமையான முறையில் மேற்கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version