உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்கும் சேவையை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நிறுத்தப்படும்.
கட்டுப்பாடுகள்
மேலும், தேர்தலின் போது ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளில் கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
