Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்

0

 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்றிரவு(16) கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

செக்-இன் கவுண்டர்களிலும் குடியேற்ற நிலையங்களிலும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டதாகவும், தாமதங்களால் பலர் தங்கள் விமானங்களை தவறவிட நேரிட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், புறப்படும் பகுதிகள் மிகவும் நெரிசலாக இருந்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கும் பாதிப்பு

ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததால், விமான நிலையம் தன்னுடைய கொள்ளளவை மீறி இயங்கியதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, குறித்த நிலைமை காரணமாக சுற்றுலா பயணிகளும் பாதிப்படைந்து குழப்பமான சூழ்நிலை குறித்து விரக்தி வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version