வவுனியா மாநகர சபையில் சோலை வரி தொடர்பில் அமைதியின்மை ஏற்பட்டு ஆளும் மற்றும்
எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாநகர சபையின் இரண்டாம் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் அவர்கள்
தலைமையில் நேற்று (31) இடம்பெற்றது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு
கடந்த அமர்வில் சோலை வரி தொடர்பில் குடியிருப்புக்களுக்கு 8 வீதமாகவும்,
வர்த்தக நிலையங்களுக்கு 10 வீதமாகவும் வாக்கெடுப்பின் மூலம்
தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
குறித்த விடயம் ஆளுனரின் அனுமதிக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் சபைக்கு தெரியப்படுத்தினார்.
இதன்போது, சோலை வரி அறவீடு தொடர்பாக சரியான தகவல்கள் தமக்கு முன்னர்
வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், சபை முதல்வர் தவறான தகவல்களை வழங்கி
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும், குடியிருப்பு வரியை 5 வீதமாக குறைக்க
வேண்டும் என சுயேட்சை உறுப்பினர்களான சி.பிறேமதாஸ், சி.கிரிதரன், தேசிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்களான க.விஜயகுமார், க.கிருஸ்ணதாஸ், சி.சிவசங்கர், இலங்கை
தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களான முனாவர், பர்சான், லலித், விபுலகுமார
ஆகியோர் கோரிக்கையை முன்வைத்து கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபை முதல்வர், ஏற்கனவே எடுக்கப்பட்ட
தீர்மானத்திற்கு அமைய குடியிருப்புகளுக்கு 8 வீதம் அறவிட வேண்டும் எனவும், இது
தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு விட்டது எனவும் தெரிவித்ததுடன், சபைக்கு வருமானம்
தேவை எனவும் கூறி தனது கருத்தை முன்வைத்தார்.
இதன் போது சபை உறுப்பினர்களான
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எம்.லரீப், அப்துல் பாரி, ஜனநாயக தமிழ்
தேசியக் கூட்டணியைச் சேர்ந்த சி.அருணன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியைச்
சேர்ந்த தர்மரட்ணம் மற்றும் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் ஆகியோர் சபை
முதல்வருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
சபைக்கு வருமானம் தேவை என்பதற்காக
இதனால் ஒரு மணிநேரத்திற்கு மேலாக சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
ஏற்கனவே
எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீளப் பெற்று விசேட அமர்வு ஒன்றின் மூலம் சோலை வரி
அறவீடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கிராம மக்கள்
பாதிக்கப்படுகிறார்கள். சபைக்கு வருமானம் தேவை என்பதற்காக கிராம மக்கள்
பாதிக்கப்படக் கூடாது என சபை உறுப்பினர்களான பிறேமதாஸ், விஜயகுமார்,
சிவசங்கள், முனாவர் ஆகியோர் தொடர்ந்தும் குரல் எழுப்பிய நிலையில் முதல்வரும்
அதற்கு பதில் அளிக்க சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
சுமார் ஒரு மணிநேரமாக நடந்த விவாதத்தையடுத்து இது தொடர்பில எழுத்து மூலம்
தாருங்கள விசேட அமர்வு நடத்தலாம் என முதல்வர் அறிவித்தார்.
குறிக்கிட்ட
எதிகட்சி உறுப்பினர்கள் நாம் ஏற்கனவே 10 பேர் கையொப்பம் இட்டு கடிதம்
வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
இதனையடுதது இது தொடர்பில் தொடந்தும்
கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்ட்டு அடுத்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
