Home இலங்கை அரசியல் அநுர அரசுக்குள் குழப்பமா ..! முரண்படும் அமைச்சர்கள்

அநுர அரசுக்குள் குழப்பமா ..! முரண்படும் அமைச்சர்கள்

0

 அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

அண்மைய சில தினங்களாக அநுர அரசில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் இருக்கும் இருவர் ஊடகங்களுக்கு வழங்கி வரும் செவ்விகள் அந்த ஐயத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இதன்படி அண்மையில் சுயாதீன தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போது விரைவில் அரசாங்க பதவிகள் மற்றும் பொறுப்புகளில் மாற்றங்கள் நிகழ உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க(bimal rathnayake) தெரிவித்திருந்தார்.

 வரும் மாதங்களில், புதியவர்களை நியமிப்பது உட்பட பொறுப்புகளில் மாற்றங்களைக் காண எதிர்பார்க்கிறேன். இது குறித்து திறந்த மற்றும் நட்புரீதியான விவாதங்களை நடத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் மாறுபாடான கருத்து 

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் “இயந்திரத்தை” மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti) கூறியுள்ளார். அமைச்சரவை மாற்றம் தற்போது தேவையற்றது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் வேறு யாராவது இதுபோன்ற மாற்றங்களைத் தொடர்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவும் சுயாதீன ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின்போதே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version