Home இலங்கை சமூகம் அதிகரிக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டுக்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை

அதிகரிக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டுக்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை

0

நபர் ஒருவருக்கு விஷ பூச்சி கடித்த நிலையில் சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும்
இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர்
ரி.கனகராஜ் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விஷ பூச்சி கடிக்குள்ளான தனது தந்தையினை ஒருவர் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது மருத்துவமனையில் இரவு வேளையில் மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை.

பிரசுரிக்கப்பட்ட செய்திகள்

யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள்
பிரசுரிக்கப்பட்டன.

செய்தி தொடர்பில் 1996ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக
பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ
அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும்
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரி
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/chavakachcheri-hospital-doctors-were-not-in-duty-1721382664

NO COMMENTS

Exit mobile version