Home இலங்கை சமூகம் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக டக்ளஸ் விளக்கம்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக டக்ளஸ் விளக்கம்

0

Courtesy: Kanagasooriyan Kavitharan

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண
ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடான கலந்துரையாடலில் இதனை
வெளிப்படுத்தினார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கு,
குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு விடுமுறையில் வழங்குவதுடன், பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களை மீளவும் கடமைக்கு திரும்பச் செய்து
வைத்தியசாலையின் செயற்பாடுகளை முதற் கட்டமாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அதன் பின்னர், விசாரணைக் குழு ஒன்றினை நியமித்து, வைத்தியசாலையில் காணப்படும்
குறைபாடுகள், அவை நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாமைக்கான காரணம், மற்றும்
வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போன்றவை
தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் இறுதித்
தீர்மானத்தினை முன்னெடுப்பது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்
இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version