சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகிறது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
கலந்துரையாடலில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த பொறுப்பான வைத்தியர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
நிகழ்வில் வைத்தியர் கேதீஸ்வரன் உட்பட பல வைத்தியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நேரடியாக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
