விபத்திற்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்து இறந்தவர்கள் எல்லோரதும் இறப்பிற்கும் இவர்கள் தான் காரணம் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில தினங்களாக நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கோரி பொது மக்கள் இன்று (08) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில் “இந்த கொலையாளிகளை அரசாங்கம் கைது செய்ய வேண்டும்.
இந்த வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட 17 மில்லியன் டொலர் பெறுமதியான இயந்திரம் மந்திகை வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கம் எமக்காக கட்டித் தந்த விபத்து சிகிக்சைப் பிரிவை பூட்டி வைத்துள்ளார்கள். இவர்கள் எப்படி பூட்ட முடியும்.
இவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். எங்களுடைய வரிப்பணத்தில் தான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. வாகனம் வழங்கப்படுகின்றது.
சட்டம் இவர்களைக் கைது செய்ய வேண்டும். இல்லையேல் மக்கள் சட்டத்தைக் கையிலெடுத்து வீதியில் இறங்குவார்கள்.“ என தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/embed/6kpbEnd6OKk