செம்மணி விவகாரம் தொடர்பில் கொலைகாரர்களிடமே நாம் நீதியை கோர முடியாது என மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
செம்மணி விவகாரத்திற்கு நீதியான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி கொழும்பிலுள்ள இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்னார் இன்று (26) நடைபெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த அமைப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, இந்த மனிதப்புதைகுழி ஒரு இன அழிப்பின் சான்று எனவும் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இதற்கான விசாரணைகள் உடனடியாக நடைபெற வேண்டும் எனவும், இந்த குற்றங்களை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
