Home இலங்கை சமூகம் செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம் : அகழ அகழ சிறார்களின் என்புக்கூடுகள்

செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம் : அகழ அகழ சிறார்களின் என்புக்கூடுகள்

0

யாழ்ப்பாணம் (Jaffna), செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது சிறார்களின் என்புக் கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக சட்டத்தரணி எஸ். வீ. நிரஞ்சன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இரண்டு சிறார்களின் என்புக்கூடுகளும், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதை குழி

இதனிடையே, சேலை போன்றதொரு ஆடையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது முழுமையாக புதை குழியிலிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில், ஒரே இடத்தில் பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூடுகள் தொகுதியாக காணப்படுவதால் அவற்றை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

சித்துப்பாத்தி மனித புதை குழியில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளில் இதுவரையில் சுமார் 40 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. 

அவற்றில் 34 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். வீ. நிரஞ்சன் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version