Home இலங்கை சமூகம் செம்மணி விவகாரத்தில் ஈழத்தமிழர்களுக்கு காத்திரும் சர்வதேசத்தின் முக்கிய பதில்

செம்மணி விவகாரத்தில் ஈழத்தமிழர்களுக்கு காத்திரும் சர்வதேசத்தின் முக்கிய பதில்

0

அண்மைய காலமாக வடகிழக்கு தமிழர் பிரதேசத்தில் பெரும் விவாதத்துக்கும் பரபரப்புக்கும் உரிய விடயமாக மாறியுள்ளது செம்மணி மனித புதைக்குழி விவகாரம்.

தொடர்ந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் மக்களுக்கு பாரிய கேள்விகள் எழுந்துள்ளது.

இந்தநிலையில், அரசாங்கம் இது தொடர்பில் தெளிவான பதில் வழங்க வேண்டும் எனவும் தங்களுக்கான உரிய நீதியை பெற்று தர வேண்டும் எனவும் மக்கள் தொடர் போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

உள்நாட்டில் மலையகம் மற்றும் தென்னிலங்கை தரப்பிலும் இது தொடர்பில் சிலர் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், சர்வதேச அளவிலும் இது பூதாகரமான விடயமாக வெடித்துள்ளது.

இதில் ஆரம்பக்கட்டமாக அண்மையில் அணையா விளக்கு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் சில பிரச்சினைகளும் ஏற்பட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இது தொடர்பிலும், செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் பார்வை, அரசாங்கத்தின் நிலைப்பாடு, தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அணையா விளக்கு போராட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி இருந்த மக்கள் செயல் எனும் தன்னார்வ அமைப்பில் ஒரு செயற்பாட்டாளரான வைத்தியர் உதயசீலன் கற்கன்டு தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி,   

https://www.youtube.com/embed/OBekiy4CnRc

NO COMMENTS

Exit mobile version