Home இலங்கை சமூகம் செம்மணி போராட்டக் களத்தில் கடும் குழப்பம்! விரட்டியடிக்கப்பட்ட சாணக்கியன்

செம்மணி போராட்டக் களத்தில் கடும் குழப்பம்! விரட்டியடிக்கப்பட்ட சாணக்கியன்

0

யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.  

போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் வருகைத் தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் அதிருப்தியடைந்து முரண்பட ஆரம்பித்துள்ளனர்.

செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்து  பொதுமக்கள்  சீற்றமடைந்ததுடன், அந்த இடத்தில் இருந்து சாணக்கியன் உள்ளிட்டோரை  வெளியில் செல்லுமாறுகோரி  முரண்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதனையடுத்து போராட்டக் களத்தில் இருந்து சாணக்கியன் உள்ளிட்ட சிலர் வெளியேறிச் சென்றனர். 

NO COMMENTS

Exit mobile version