Home இலங்கை சமூகம் தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுப்பு கூற வேண்டும்: அருள் ஜெயந்திரன் வலியுறுத்து

தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுப்பு கூற வேண்டும்: அருள் ஜெயந்திரன் வலியுறுத்து

0

தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டு கொண்டு செல்வதற்கு
பிரித்தானியாவே பொறுப்பு கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்
செயலாளர் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி புதைகுழி விவகாரத்துக்கு துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ்.
மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(18) அடையாள போராட்டம் ஒன்று குறித்த கட்சியால்
முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  இன்று தமிழர் பிரதேசங்களில் மனித புதைகுழிகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்படு
அகழப்பட்டு என்புக் கூடுகள் நூற்றுக்கணக்கில் மீட்கப்பட்டு வருகின்றது.

இவை அனைத்தும் காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் உடலங்களின் எச்சங்களாகவே
இருக்கும் என எண்ணத் தோன்றுகின்றது.

அரசியல் இழுபறி 

ஆனாலும் அவை எவற்றுக்கும் இதுவரை நியாயமோ பரிகாரங்களோ கிடைக்கவில்லை. மாறாக
இழுத்தடிப்புகளும் மறைப்புகளுமே இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்றது. இதை பிரித்தானிய அரசு வழங்கிய
காலத்திலேயே தமிழ் சிங்கள இனங்களுக்கிடையே அரசியல் இழுபறி இருந்து வந்தது.

ஆனாலும் அதை பிரித்தானிய அரசோ, அன்றி அன்றைய தமிழ் தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை.

சர்வதேச விசாரணை

அன்றைய தமிழ் தலைவர்களும் சிங்கள தேசம் வழங்கிய சலுகைகளுக்கு இசைவாகி
கண்டுகொள்ளாதிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையில் நடைற்ற இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை
ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றக இருக்கின்றது.

அதேபோன்று சர்வதேச விசாரணையும்
வலுவிழந்து கிடக்கிறது.

அதன்படி தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசுதான்
தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version