16 வயது தொடக்கம் 40 வயதிற்கு இடைப்பட்ட பல நூற்றுக்கணக்கானோர் திட்டமிட்டு இல்லாமலாக்கப்பட்டுள்ளமைதான் முதலாவது செம்மணி புதைகுழி விடயத்தில் இருக்கும் பதிவுகள்.
ஆனால் இன்று செம்மணி புதைகுழியில் பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் எல்லோருடைய உடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் யார்? எப்படி இதற்குள் வந்தார்கள் என்ற கேள்வி இருக்கின்றது.
1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றிய போது ஒரே இரவில் மக்கள் இடம்பெயர்ந்து போன போது பெரும்பாலானவர்கள் வன்னி நிலப்பரப்பிற்குள் போய்ச்சேர்ந்த நிலையில் அவர்களில் சிலர் அந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அவர்களுக்கு தெரியாமலே படகுகள் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற ஒரு பழக்கம் இருந்தது.
அவ்வாறு வருபவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் குருநகரையொட்டிய கரையோரப் பகுதிகளில் இருந்த இராணுவத்தினரின் பகுதிக்கே வந்து சேர்ந்தனர்.
இராணுவம் அவர்களை அங்கிருக்கும் தற்காலிக முகாமில் வைத்து சோதனை செய்த பின்னரே சமூகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு வருபவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்கள் பற்றி எந்த தகவலும் வெளிவராது. அவர்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் வந்திருப்பார்கள். அவர்கள் கூட கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது சாத்தியப்படும்.
https://www.youtube.com/embed/gFSaXb6f7z0
