Home இலங்கை சமூகம் செம்மணியில் இன்றும் அடையாளம் காணப்பட்ட சிறிய எலும்பு கூட்டு தொகுதி

செம்மணியில் இன்றும் அடையாளம் காணப்பட்ட சிறிய எலும்பு கூட்டு தொகுதி

0

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று(02) மேலும் 4 மனித
எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன் இதில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின்
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 41வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக
நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

சிறிய எலும்பு கூட்டு தொகுதி

 இதேவேளை செம்மணி புதைகுழியில் பெரிய எலும்பு கூட்டு தொகுதியின் தோள் பட்டையுடன் ,
தொடுகையுற்றவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம்
காணப்பட்டுள்ளது. 

கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மூன்று
சந்தர்ப்பங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள்
மீட்கப்பட்டுள்ள நிலையில் , தற்போது மேலும் இரு எலும்பு கூட்டு தொகுதிகள்
ஒன்றுடன் ஒன்று தொடுகையுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

NO COMMENTS

Exit mobile version