Home இலங்கை சமூகம் சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுமியின் ஆடை

சித்துப்பாத்தி மயானத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுமியின் ஆடை

0

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து
மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு
அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் இருந்து நேற்று சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடையின் சில
பகுதிகள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்
புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள்,
ரோன் கமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின்
அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால்
நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அகழ்வு பணிகள் 

இந்தப் புதிய பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின்
பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பமாகின.

இந்நிலையில் நேற்று முன்தின அகழ்வின்போது ஆடை ஒன்றின் சில பகுதிகள் அடையாளம்
காணப்பட்டிருந்தன. அந்த இடத்தில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது சிறுமியின் ஆடை
ஒன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version