சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ள யாழ். செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் இலங்கை இராணுவத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் மனித நேயமற்ற செயல்களில் இலங்கை இராணுவத்தின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
மேலும், குறித்த சம்பவங்களில் நாட்டை ஆட்சி செய்து வந்த அரசாங்கங்களும் தொடர்புற்றுள்ள நிலையில், இக்குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு அநீதி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தற்போது அநுர அரசாங்கமும் செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் இலங்கை இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் மேலும் பல தகவல்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
