Home இலங்கை சமூகம் தமிழர்களை குறிவைத்த புலனாய்வு நடவடிக்கை!

தமிழர்களை குறிவைத்த புலனாய்வு நடவடிக்கை!

0

யாழ். செம்மணி மனித புதைகுழியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

அண்மையில், குறித்த புதைகுழியில் இருந்து யுனிசெஃப் பையுடன் ஒரு பச்சிளங் குழந்தையின் உடல் எச்சம் மீட்கப்பட்டதன் வேதனை இன்னமும் ஆறாத நிலையில் அனைவரது மனதையும் வாட்டிக் கொண்டு இருக்கின்றது. 

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளின் ஒரு பகுதியே செம்மணி மனித புதைகுழி. அவ்விடத்திலிருந்து தோண்டப்பட்டு வரும் உடலங்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் என கூறப்படுகின்றது. 

இந்நிலையில், மிக அதிகமாக பேசப்பட்டு வரும் இந்த பேரதிர்ச்சி நிகழ்வுக்கு மத்தியில், இதனை திசை திருப்பவே இருகோட்டு தத்துவ பாணியில் பல மாற்று அரசியல் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version