Home இலங்கை அரசியல் 11 மாணவர்கள் கடத்தல் விவகாரம்.. விரைவில் குற்றவாளி அம்பலம் – அநுரவின் அதிரடி அறிவிப்பு

11 மாணவர்கள் கடத்தல் விவகாரம்.. விரைவில் குற்றவாளி அம்பலம் – அநுரவின் அதிரடி அறிவிப்பு

0

 11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தின் குற்றவாளி வெகுவிரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (19) உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “விடுதலை புலிகள் காலத்தில் கண்டுபிடிக்க தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்த போதும் அது இயலாமல் உள்ளது.

விடுதலைபுலி கால நகைகள்..

எனவே, அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை, செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு.

11 மாணவர்கள் கடத்தல்  

இராணுவத்தினர் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது இராணுவத்தினரை வேட்டையாடுதல் என்று குறிப்பிட முடியாது.

அது மாத்திரமன்றி, 11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குற்றவாளி வெகுவிரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

சட்டத்தை சரியாக செயற்படுத்தும் போது இராணுவ பழிவாங்கள் என்று கோசம் எழுப்ப வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version