யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இன்றுடன் (10) நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தம்
24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், தடயவியல்
அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் 63 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல்
அகழ்வாய்வுத்தளம் இரண்டில் 2 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 65 மனித
எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வு
பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில்,
தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா
பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
