சிங்களம் தெனை எதிர்பார்க்கிறதோ அதனை நிறைவேற்றத் தெரிந்தோ தெரியாமலோ எமது மக்கள் கூட்டத்தினரில் சிலர் துணைபோவது வருத்தமளிக்கும் விடயமாக உள்ளது என முன்னாள் போராளி பசீர் காக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், சிங்களம் தெனை எதிர்பார்க்கிறதோ அதனை நிறைவேற்றத் தெரிந்தோ தெரியாமலோ எமது மக்கள் கூட்டத்தினரில் சிலர் துணைபோவது வருத்தமளிக்கும் விடயமாக உள்ளது. காணாமற் போனோரின் உறவுகள் சர்வதேசநீதி கேட்கும் சந்தர்ப்பத்துக்காக வலியோடு இத்தனை வருடம் காத்திருந்தனர்.
அணையா விளக்கு
மக்கள் செயல் எனும் இளையோர் அமைப்பினர் “அணையா விளக்கு” எனும் பெயரில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் போராட்டத்தைக் கனிய வைத்து ஐ.நா. பிரதிநிதியிடம் ஏழு அம்சங்கள் உள்ள கோரிக்கையைக் கையளிக்கத் திட்டமிட்டனர்.
ஆனால் மலிவான அரசியலை முன்னெடுக்க முனையும் சில அரசியல்வாதிகளும், யார் எக்கேடு கெட்டாலென்ன பரபரப்பை உருவாக்க, லைக்க்குகளை அள்ளிப் பணம் பண்ணுவதையே இலக்காகக் கொண்ட சில ஊடகவியலாளர்களும் நின்றதைக் காணும்போது இரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
