Home விளையாட்டு புதிய தலைமைப் பயிற்சியாளரை அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

புதிய தலைமைப் பயிற்சியாளரை அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

0

2027-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சகீர் கான் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்த தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கடந்த ஜூலை மாதம் அணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணிக்கு இந்த நியமனம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

முன்னர் பணியாற்றிய இடங்கள்

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சகீர் கான், இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் சார்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் gணிப்பாளராகவும், பின்னர் அந்த அணியின் உலகளாவிய கிரிக்கெட் மேம்பாட்டுத் தலைவராகவும் பணியாற்றினார்; அதன்பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகராக (mentor) இணைந்தார். 

Source: https://ibctamil.com/article/chennai-super-kings-announce-new-head-coach-1790006704

NO COMMENTS

Exit mobile version