Home இலங்கை சமூகம் முதல் நாள் கஜேந்திரன்கள் மறுநாள் அனுர அமைச்சர்! சென்னை Real politik

முதல் நாள் கஜேந்திரன்கள் மறுநாள் அனுர அமைச்சர்! சென்னை Real politik

0

அரசியல் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லையென தமிழில் குறிப்பிடுபவர்கள் அந்த கருத்தியலில் உள்ள மூன்றாவது வாசகத்தை பொதுவாக குறிப்பிடுவதில்லை.

அரசியல் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை ஆனால் அங்கு நிரந்தர நலன்கள் இருக்கும் என்பது தான் முழுமையான வாசகமாகும்.

பிரித்தானிய அரசியல் தலைவரான பால்மர்ஸ்ரன் பிரபு இதனைத்தான் அன்று We have no eternal allies, we have no perpetual enemies. Our interests are eternal and perpetual (நமக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை நமது நலன்கள் நிரந்தரமானவை) என்றார்.

இப்போது பாக்குநீரிணைக்கு அப்பால் கஜேந்திரன்கள் வெளிப்படுத்தும் ஸ்ராலின் முதல் சீமான் வரையான சந்திப்புக்கள் மற்றும் ஸ்ராலினுக்கு கஜேந்திரகுமார் பொன்னாடை போர்த்திய காட்சிகளை மையப்படுத்திய அதிர்வுகளிளும் இந்த மேற்கோள் எட்டிப்பார்க்கிறது.

இலக்குகளை மாற்றுவது கூட்டணிகளை மாற்றுவது முன்னாள் பங்காளிகளை ஓரம்கட்டுவது முன்னாள் பகையாளிகளுடன் நெருங்குவது எல்லாம் றியல்பொலிட்டிக்கில் (Real politik)
சாத்தியம்.

இதனால் தான் கஜேந்திரகுமார் தரப்புடன் முதல் நாளில் சந்திப்பை நடத்திய மறுநாள் (19.12.25) நேற்று அதே முதல்வர் ஸ்ராலின் அனுர அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை முதல்வர் சந்திக்க முடிந்தது.

ஆகமொத்தம் பிணைப்புகள் உறவுகள். நட்புகள் அல்லது பகைமைகள் நிலையானவை அல்ல அவை நிலையற்றவை. என்பதை சமகால சந்திப்பு மிசன்கள் வெளிப்படுத்தும் நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு …

https://www.youtube.com/embed/eHvpoaODU_c

NO COMMENTS

Exit mobile version