Home இலங்கை அரசியல் வடக்கு மாகாண சபை காலத்தில் தையிட்டி விகாரை அமைக்கப்படவில்லை : அடித்துக்கூறும் சுரேஸ்

வடக்கு மாகாண சபை காலத்தில் தையிட்டி விகாரை அமைக்கப்படவில்லை : அடித்துக்கூறும் சுரேஸ்

0

வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் தையிட்டி விகாரை அமைக்கப்படவில்லை.வடக்கு மாகாண முதலமைச்சருக்கு தமக்கு காணிகள் வேண்டுமென இராணுவத்தினர் கடிதங்களை அனுப்பியபோதிலும் அவை அனைத்தும் முதலமைச்சரால் நிராகரிக்கப்பட்டது.

 வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எதுவும் திரும்பிச் செல்லவில்லை.கேட்ட தொகையை விடவும் குறைந்தளவு நிதியே மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டது.

அதிகாரங்கள் தற்போது தமிழ் மக்களுக்கே தேவை. மாகாண சபை தேவையில்லை என்று தமிழ் மக்கள் தெரிவித்தால் இந்தியா அதிலிருந்து விலகிச் செல்லலாம்.இறுதி யுத்தத்திற்கு பின்னர் எமக்குள்ள ஒரே பிடிமானம் மாகாண சபை முறைமை மாத்திரமே.

ஆளுநர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உள்ளது.இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உள்ளது. ஆளுநர்களும் தமக்கும் அந்த அதிகாரம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தெரிவித்தார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஐபிசி தமிழ் சக்கர வியூகம் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

https://www.youtube.com/embed/avnS_e1FJPQ

NO COMMENTS

Exit mobile version