Home இலங்கை பொருளாதாரம் கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

0

இலங்கையில் (srilanka) கோழி இறைச்சியின் விலை வேகமாகக் குறையும் சாத்தியம் காணப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கோழி இறைச்சி உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி உற்பத்தி

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில், ஆண்டு முழுவதும் சராசரியாக சுமார் 220 முதல் 230 மில்லியன் கிலோ கோழி இறைச்சியே உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த வருட இறுதிக்குள் கோழி இறைச்சி உற்பத்தி மேலும் சாதனை படைக்கும் என விவசாய அமைச்சு (Ministry of Agriculture) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனவே அதிகரித்துள்ள இறைச்சி உற்பத்தி காரணமாக கோழி இறைச்சியின் விலை வேகமாகக் குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://ibctamil.com/article/chicken-meat-price-reduced-1720229604

NO COMMENTS

Exit mobile version