Home இலங்கை பொருளாதாரம் கோழி இறைச்சியின் விலை குறைப்பு

கோழி இறைச்சியின் விலை குறைப்பு

0

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இன்று (20.06.2024) கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இறைச்சி வகைகளின் விலை  

மேலும், புதிய கோழி இறைச்சி 1070 ரூபாவாகவும், தோலுடனான கோழி இறைச்சி 990 ரூபாவாகவும், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட கோழி இறைச்சி 990 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கறிக்கோழி 1050 ரூபாவாகவும், ஆட்டு இறைச்சி 3400 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version