யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த கடமையேற்பு நிகழ்வு, இன்றையதினம் (11.02.2025) அரசாங்க அதிபர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி
மாவட்டச் செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை
உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இடமாற்றம் பெற்றுவந்தவர்
பிரதம கணக்காளராக கடமையேற்ற செ. கிருபாகரன், முன்னர் இலங்கை
புகையிரத திணைக்களத்தில் பிரதம கணக்காளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுவந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
