புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக அநுரகுமார திசாநாயக்கவை (Anurakumara Dissanayake) சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பாதுகாப்பு படை பிரதானிகள்
அத்தோடு , இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் (S. Jaishankar) நேற்றைய தினம் (05) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தநிலையில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.