Home ஏனையவை வாழ்க்கைமுறை சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏற்படும் ஆபத்து

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏற்படும் ஆபத்து

0

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படும் ஆபத்துள்ளதாக பேராதனை மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார்.

முதல் 3 வாரங்களில் காய்ச்சலுடன் ஏற்படும் கடுமையான மூட்டு வலி இயல்பானது. இந்த நேரத்தில் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்குன்குனியா காய்ச்சலின் சிக்கலாக ஏற்படும் மூட்டுவலி, 40 சதவீதமானோருக்கு 3 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கிறது.

நோய் அறிகுறி

மேலும் 20 சதவீதமானோர் 3 மாதங்களுக்கும் மேலாக மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கால், கை, கைவிரல், மணிக்கட்டு பகுதியில் வீக்கம் மற்றும் வலி, மற்றும் தளர்வாக நடப்பது போன்ற அறிகுறிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என நிபுணர் ரலபனாவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version