Home இலங்கை சமூகம் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

0

இலங்கையில் சிக்குன்குனியா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் இந்நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளுக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் நிலை 2 (Level 2) சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் மூலம் வெளியிடப்பட்ட ஆலோசனை அறிவித்தலில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக்குப் பயணம் செய்யும் போது கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டித்வா புயல்

கடந்த நவம்பர் மாதத்தின் இறுதியில் இலங்கையைத் தாக்கிய மிகக் கடுமையான டித்வா சூறாவளி, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார அமைப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் தேங்கி நிற்கும் நீர் என்பவை நுளம்பு இனப்பெருக்கத்தை அதிகரித்துள்ளது.

குறித்த நிலைமையானது சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதை நேரடியாகப் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version