Home இலங்கை சமூகம் யாழில் ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்

யாழில் ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்

0

யாழ்ப்பாணத்தில் டீசலை சோடா என நினைத்து பருகிய குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை – நாரந்தனை பகுதியை சேர்ந்த சதீஸ் சஞ்ஜித் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் வீட்டில் கடந்த 18ஆம் திகதி சிறிய ரக உழவு இயந்திர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சிகிச்சை அளிப்பு 

இதன்போது சோடா போத்தல் ஒன்றில் டீசலை ஊற்றி வைத்துள்ளனர்.

அதனை வீட்டில் இருந்த குழந்தை சோடா என கருதி அருந்தியுள்ளது.

இந்நிலையில், அதனை அவதானித்தவர்கள் குழந்தையை உடனடியாக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், குழந்தை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாழ் . போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version