Home இலங்கை சமூகம் பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்

பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்

0

 பேரிடரில் பெற்றோரை இழந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் பராமரிப்பை தீர்மானிப்பதற்கான முறையான சட்ட நடைமுறைகள் முடியும் வரை அரசின் பாதுகாப்பில் இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் இயக்குநர் ஷானிகா மலல்கொட, இறுதி முடிவு ஒவ்வொரு குழந்தையின் நலன்கள் மற்றும் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களிடமே உள்ளது என்றும் கூறினார்.

அதிகார சபையின் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் தற்போது சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பேரழிவால் பொற்றோரை இழந்த குழந்தைகளின் முழுமையான பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பேரிடரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆதரவு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதே அதிகார சபையின் உடனடி முன்னுரிமை என்று அவர் மேலும் கூறினார்.

நெருங்கிய உறவினர்கள் பாதுகாப்பு கரம் நாடினாலும், முறையான சட்ட நடைமுறைகள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று வலியுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version