Home இலங்கை சமூகம் சீன அரசாங்கத்தின் மார்க்சிஸ கொள்கை.. டில்வின் சில்வா முன்வைத்த கருத்து

சீன அரசாங்கத்தின் மார்க்சிஸ கொள்கை.. டில்வின் சில்வா முன்வைத்த கருத்து

0

சீனா தமக்கே உரித்தான பாணியில் மார்க்சிஸத்தை
முன்னோக்கி கொண்டு செல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி என
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை
மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்
சில்வா உள்ளிட்ட குழுவொன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார
திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களை சந்தித்தனர். 

இதன்போது கருத்துரைத்த டில்வின் சில்வா, “இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன
கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின்
தொடக்கத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் ஒருபடி உறுதி பெற்றுள்ளது. 

சுற்றுப்பயணம்  

அதைப்போல என்னை உள்ளிட்ட எமது மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில்தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானது.

அதேவேளை சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்
அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற
ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பினை
எதிர்பார்க்கிள்றோம்.

இந்தச் சுற்றுப்பயணத்தின்போது கட்சிப் பாடசாலைகளில் மற்றும் ஊர்களை
கட்டியெழுப்புவதற்காக செயற்பட்டுள்ள விதம் பற்றிய கல்வியில் பெற்றுக்கொண்ட
அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும்” என அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version