Home இலங்கை யாழ்ப்பாணத்தின் ஊடாக இந்திய விமான நிலையத்தை வேவு பார்ப்பதில் சீனா இரகசிய முயற்சி

யாழ்ப்பாணத்தின் ஊடாக இந்திய விமான நிலையத்தை வேவு பார்ப்பதில் சீனா இரகசிய முயற்சி

0

இந்தியாவின் தஞ்சாவூர் விமான நிலையத்தில் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 120 SU-31 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை சீனாவிற்கு ஒரு அச்சுறுத்தல் என்பதால் யாழ்ப்பாணத்தின் ஊடாக குறித்த விமான நிலையத்தை வேவு பார்ப்பதில் சீனா இரகசிய முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது.

எனினும், இந்தியாவிற்கு தெரியாமல் இந்த உளவு நடவடிக்கையை மேற்கொள்வது எளிதான விடயமல்ல.

இந்நிலையில், தங்கள் உளவாளிகளை வைத்து நவீன ஆளில்லா விமானங்களின் மூலம் இந்திய விமான நிலையத்தை சீனாவால் கண்காணிக்க முடியும்.

அல்லது, உளவுபார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்ட நவீன கடற்றொழில் படகுகளை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி அதன் மூலம் இந்திய விமான நிலையத்தை கண்காணிக்க முடியும் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version