Home முக்கியச் செய்திகள் சீன பிரஜையால் ஏற்பட்ட விபரீதம் : அதிரடியாக கைது செய்த காவல்துறை

சீன பிரஜையால் ஏற்பட்ட விபரீதம் : அதிரடியாக கைது செய்த காவல்துறை

0

களுத்துறை(kalutara) நகரில் பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த தந்தை மற்றும் மகன் இருவரையும் சீனப்(china) பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகனும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

களுத்துறை நாகொடை சந்தர்ஷனாராம வீதியில் வசிக்கும் வட்ட வடுகே சதுன் அரவிந்த என்ற (46) வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டி வந்த சீன நபர் கைது

காரை ஓட்டி வந்த சீன நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காரை கைப்பற்றியதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

சீனக் குழுவினர் பயணித்த கார் பேருவளையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்ததாகவும், கடல் கரையோரமாக காரை திருப்பியபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். 

   

Source: https://ibctamil.com/article/chinese-man-arrested-for-father-son-collision-1718609134?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version